Smart work

ஒரு நாள், 
🐕நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு 🐅சிங்கம் ஒன்று பசியோடு அலை வதைப் பார்த்த 🐕நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த 🍖எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. 🐅சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு 🍖எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, 📢சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு 😋சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு 🐅சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட 🐅சிங்கம் "அய்யோ..! இந்த 🐕நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் 🌴மரத்தின் மேல் இருந்து 🐒குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. 🐅சிங்கத்தை ஏமாற்றிய இந்த🐕 நாயை 🐅சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், 🐅சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே 🐅சிங்கத்திடம் சென்று,🐕 நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த🐕 நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட 🐅சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த 🐕நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று 🐒குரங்கை முதுகில் ஏந்திய படி 🐕நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. தன்னை நோக்கி 🐅சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த 🐕நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த 🐒குரங்கை அனுப்பி ⌚ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு 🐅சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று 📢உரக்க கூறியது. இதை கேட்டதும், 🐅சிங்கம் 🐒குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. --- நாம் பணிபுரியும் இடத்தில் பல 🐒குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். "கடுமையாக உழைப்பதை(Hard Work) விட திறமையாக உழைக்கக் (Smart Work) கற்று கொள்ள வேண்டும். 

Sakthi

No comments:

Post a Comment

Instagram