இரவல் பொருள்


ஒரு மனிதன் கண் தெரியாதவர்க்கு அடைக்கலம் குடுத்தான். கண் தெரியாதவர் சில நாட்கள் தங்கிவிட்டு புறப்பட தயாரானார். உடனே அந்த மனிதன் இருட்டிவிட்டது நாளை உதயத்தில் செல்லுங்கள் என்று சொன்னான்.
கண் தெரியாதவர் எனக்கு இரவும் பகலும் ஒன்று தான் என்று கிளம்பிவிட்டார். செல்லும் போது அந்த மனிதன் ஒரு விளக்கை கையில் குடுத்தான். நீங்கள் வருவது மற்றவர்க்கு தெரிந்து ஒதுங்கிகொள்ள உதவியாக இருக்கட்டும் என்றான்.

செல்லும் வழியில் ஒருவன் மிக மோசமாக மோதிவிட்டான். உடனே கோவமுற்று ஏன் என் மீது மோதிகிறாய் விளக்கு இருப்பது உன் கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேட்டான். உடனே அவன் மன்னிக்க வேண்டும் உங்கள் விளக்கு அணைந்துவிட்டது என்றான். உடனே கண் தெரியாதவரும் மன்னிக்க வேண்டும் இரவல் பொருள் இறுதிவரை வராது என்று கோலுடன் தட்டி தட்டி நடக்கலானான்.
மற்றவர் உதவி கடைசிவரை கூட வராது. 

இரவல் பொருள் மட்டுமல்ல ஞானமும் தான்.


Sakthi

No comments:

Post a Comment

Instagram