ஏக பத்னி விரதன் சீதா ராமன்
இரண்டு மகன்களான லவ குசனின் தந்தை ஸ்ரீ ராமன்.
மூன்று அன்னையர்களான கௌசல்யா சுமித்திரா கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன் ஸ்ரீ ராமன்.
நான்கு புதல்வர்களான ராமன் இலட்சுமணன் பரதன் சத்ருக்கனின் தந்தை தசரத ராஜன்.
ஐம்புலன் அடக்க முள்ளவள் சீதா தேவி. ஐந்தாவது உடன் பிறவாத வேடன் குகனை உடன்பிறப்பாக ஐவராக ஏற்றுக் கொண்டவன் ஸ்ரீ ராமன்.
ஆறு எழுத்து இராமாயணம் ஆருயிர் களின் வாழ்க்கைக்கு ஸ்ரீ ராம ஜெயம் ஊட்டமருந்தாக இருக்கின்றது,
ஏழு காண்டங்களான [ பால அயோத்திய ஆரண்ய கிஷ்கிந்தா சுந்தர யுத்த உத்தரகாண்டம் ] இராமாயணம் ஒரு நல்ல அகராதி.
எட்டு எழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ராமதாசன் ஆஞ்சநேயர் .
நவமி திதியில் சூரியகுலத்தில் மானிடனாக அவதரித்தவன் ஸ்ரீ ராமன்.
பத்து தலை அரக்கன் இராவணனை அழித்தவன் ஸ்ரீ ராமன்.
No comments:
Post a Comment