ஆ சிந்தோ: சிந்துபர்யந்தம் யஸ்ய
பாரத பூமிகா மாத்ரு பூ:
பித்ரு பூ புண்ய (ஸ்)சைவ
ஸ வை ஹிந்து இதி ஸ்ம்ருதா:
சப்த சிந்து (இண்டஸ் நதி) முதல் இந்தியப் பெருங்கடல் வரையான நிலப்பரப்பை தாய்நாடு / தந்தை நாடாகவும் புண்ணிய பூமியாகவும் யார் கருதியிருக்கிரானோ அவன் ஹிந்து ஆவான்.
ஹிமாலயம் ஸமாரப்ஹ்ய
யாவத் ஹிந்து சரோவரம் தம்
தேவ நிர்மிதம் தேசம்
ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே
ஸ்வயம் கடவுளால் படைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு ஹிமாலயம் முதல் இந்தியப் பெருங்கடல் வரை பரந்து விரிந்து ஹிந்து ஸ்தானம் என்றழைக்கப்படுகிறது.
சனாதன தர்மம் அல்லது இந்து தர்மத்தின் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், உண்மையில் இந்து தர்மத்தை உருவாகியவர்கள் இதை ஒரு மதமாகக் கருதாமல் தர்மமாகவே கருதினார்கள். தர்மம் என்றால் வாழும் கலை, அதாவது நிம்மதியான முறையில் வாழ்வதற்கு ஏற்படுத்தப்பட்ட வழிமுறைகள் (ஆச்சார விதிமுறைகள்).
பெண்களால் பின்பற்றப்படவேண்டிய ஆச்சாரங்களை மாத்ரு தர்மம் என்றும், ஆண்களால் பின்பற்றப்பட வேண்டிய ஆச்சாரங்களை பித்ரு தர்மம் என்றும், மகன் செய்ய வேண்டியதை புத்திர தர்மம் என்றும், ஆசிரியர் செய்ய வேண்டியதை ஆச்சார்யா தர்மம், சகோதரனுக்கு பிராத்ரு தர்மம், சகோதரிக்கு பாகினி (பாகம் உடையவள் என்ற பொருள் வரும்) தர்மம் என்றும், பௌர (குடிமக்கள்) தர்மம், ராஜ தர்மம் என்றும் வகை படுத்தி வைத்துள்ளனர். இதைத்தான் ஸ்ம்ரிதிக்களும் தர்ம சாஸ்திரங்களும் கடமைகளாகவும், பொறுப்புக் களாகவும், சட்டங்களாகவும் இயற்றி வைத்துள்ளன.
சனாதன தர்மம் என்றால் இவை அனைத்தையும் ஒன்றாகப் பின்பற்றும் நோக்கம் உடைய ஒரு குழுவாகும். இந்து தர்மத்தின் ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகம் பின்னிப் பிணைந்துள்ளது. ஆன்மீகம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை!
1,280 புனித நூல்கள், 12,000 விளக்கங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உபவிளக்கங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், பலதரப்பட்ட மடங்கள், ஆசாரியர்கள், ரிஷிகள், நூற்றுக் கணக்கான மொழிகள் என்று இருக்கிறது கூட இந்து மதத்தில் இருக்கும் சுதந்திரம் காரணமாகத்தான். ஆனாலும் ஹிந்துக்கள் அனைவரும் எல்லாக் கோவில்களுக்கும் அவரவர் விருப்பம் போல போகிறார்கள்.
மனிதர்கள் தவறுகிறார்கள். சட்டங்கள் / தர்மங்கள் தவறுவதே இல்லை. மனிதர்களின் தவறுகளுக்கு தர்மங்களை குறை கூறுவது, அல்லது நம் சௌகரியத்துக்கு ஹிந்து தர்மத்தை மதிப்பு குறைத்து கூறி வருவதால் எந்த மாற்றமும் பாதிப்பும் வேதங்களுக்கோ ஹிந்து தர்மத்துக்கோ ஏற்படப்போவதில்லை.
நான் படித்து அறிந்த வரை, வேதங்கள் அல்லது ஹிந்து தர்மம் என்றும் யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. இப்படி வாழ்தல் நன்மை என்று கூறியுள்ளதே தவிர இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்வதில்லை. தினசரி கோவிலுக்குப் போனால் தான் அவன் ஹிந்து என்று கட்டாயம் செய்வதில்லை. இந்தக் கட்டற்ற சுதந்திரம் மட்டுமே ஹிந்து தர்மத்தின் பலமாகும். காலங்காலமாய் வேதங்களையும் ஹிந்து தர்மத்தையும் அவதூறுகள் செய்து வந்தாலும், கட்டாயத்தாலோ பிறப்பாலோ அல்லாமல் "உண்மையாகவே ஹிந்து தர்மத்தை வேதங்கள் மூலம் அறிபவர்கள், ஹிந்து தர்மத்தை மட்டும் இல்லை, எல்லா தர்மங்களையும் மதங்களையும் ஒன்றாகவே பாவித்து மதிப்புக் கொடுப்பார்கள்".
No comments:
Post a Comment